ஈரானுக்கும், வளர்ச்சியடைந்த, 6 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே, நடைபெற்று வந்த அணு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது.
அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு இடையிலான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு மேம்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈரான் மீதான விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நீக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஒபாமா உத்தரவுவிட்டுள்ளார்.