உகண்டா நாட்டில் பேஸ்புக் ,டுவிட்டர் , வட்ஸ் அப் , வைபர் உள்ளிட்ட சகல சமூக வலைதளங்கள் மற்றும் தொலைதொடர்பு மென்பொருள்கள் என அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
சர்வாதிகார ஆட்சியாளர் ஆண்ட உகண்டாவில் இம்முறை பெப்ரவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அந்த தேர்தலில் அந்த நாட்டு ஜனாதிபதி முசவெனி வெற்றிபெற்றபோதும் அங்கு நீதியான தேர்தல் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பெப்ரவரி தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற முசவேனி இன்று (13) பதவியேற்கும் நிலையில் அந்த நாட்டு பிரதான எதிர்கட்சி தலைவர் அவரது ஆதரவாளர்களை கூட்டி ஜனாதிபதியாக சத்தியப்பிரமானம் செய்துகொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த நாட்டு ராணுவம் அவரை கைதுசெய்துள்ளது.
இன்று உகண்டா ஜனாதிபதியாக பதவிப்பிரமானம் செய்துகொண்ட முசவேனியின் விஷேட அழைப்பில் மகிந்த ராஜபக்ஷவும் பதவியேற்ப்பு விழாவில் கலந்துகொண்டுள்ளார்.