கிழக்கு உக்ரைன் போராளிகள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற தங்கள் நாட்டு போர் விமானத்தை, ரஷ்யா ஏவுகணையை வீசி சுட்டு வீழ்த்தி விட்டதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
’எஸ்.யூ.25’ ரகத்தை சேர்ந்த அந்தப் போர் விமானத்தை ரஷ்ய ஏவுகணை இன்று வழிமறித்து தாக்கி அழித்து விட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அந்த போர் விமானத்தின் விமானி உயிர் தப்பிவிட்டதாகவும் கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உக்ரைன் அரசு நடத்தி வரும் சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.