Breaking
Sat. Nov 16th, 2024

எதிர்வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல் இந்­நாட்டு மக்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான தேர்­த­லாகும். இதில் நீங்கள் உங்­க­ளையும், உங்கள் குடும்­பத்­தையும் பாது­காத்துக் கொள்­வதா அல்­லது மஹிந்த ராஜபக் ஷவையும், அவ­ரது குடும்­பத்­தையும் பாது­காத்துக் கொள்­வதா என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும்.

உங்­க­ளுக்கு உங்கள் குடும்­பமும், உங்­க­ளது எதிர்­கா­லமும் நாச­மாகிப்போக வேண்டும் என்றால் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி லான கூட்­ட­ணிக்கு வாக்­க­ளிக்க முடியும். இந்தத் தேர்தல் உங்கள் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிக்கும் ஒரு தேர்தல் என ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சிலாபம் நகரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

பிர­தமர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், கடந்த ஜன­வரி 8 ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலின் போது நாம் மைத்­தி­ரி­பால சிறிசே­னவின் கீழ் நாட்டில் நல்­லாட்சி ஒன்றை ஏற்­ப­டுத்­தினோம்.

நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத்  தேர்­தலில் நீங்கள் விரும்பும் ஒரு பிர­த­மரைத் தெரி­வு­செய்து கொள்­வ­தற்­கான சந்­தர்ப்பம் உங்­க­ளுக்கு தற்போது கிட்­டி­யி­ருக்­கின்­றது. இதற்­காக உங்கள் எதிர்­கா­லத்தைச் சிறப்­பாக்கும் ஒரு தேர்­த­லாக இந்தத் தேர்­தலை நீங்கள் பயன்­ப­டுத்திக் கொள்ள வேண்டும்.

அறு­பது மாதத்தில் புதி­யதோர் நாட்டை உரு­வாக்கும் வேலைத்­திட்­டத்தை நாம் முன்­வைத்­தி­ருக்­கின்றோம். இதுவே எமது திட்டம். அடுத்த 5 வரு­டத்தில் இந்­நாட்டில் 10 இலட்சம் வேலை வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்கு இந்த வேலைத்­திட்­டத்தில் விசேட கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளதை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்­பு­கிறேன்.

வெளி­நாட்டு முத­லீ­டுகள், தொழிற்­சா­லை­களைக் கொண்டு வந்து ஹோட்டல், கணினி சேவை நிலை­யங்கள்  ஏற்­ப­டுத்­தப்­படும். இதன் ஊடாக பாரி­ய­ள­வி­லான வெளி­நாட்டு சந்தை வாய்ப்­புக்­களைப் பிடித்துக் கொண்டு உங்­களால் முன்­னேறிச் சென்று வெகுவிரைவில் உங்­க­ளது வரு­மா­னத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்­கான வாய்ப்­புக்­களை ஏற்­ப­டுத்த நாம் நட­வ­டிக்கை மேற்­கொள்வோம்.

எமது திட்­டங்­களின் மூலம் அதிக வரு­மான வழி­களை ஏற்­ப­டுத்தக் கூடிய தொழிற்­சா­லை­களை உரு­வாக்க வேண்டும்.  இதில் உங்­களால் அதிக வரு­மா­னத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்­திட்­டத்தின் ஊடாக இந்த பிர­தே­சங்­க­ளுக்கும், இந்த சிலா­பத்­திற்கும் நன்­மைகள் ஏற்­படும். இங்கு தொழிற்­சா­லைகள் வரும். சுற்றுலாத் துறை விருத்­தி­ய­டையும்.

அதேபோல கடல் உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்யக் கூடி­ய­வாறு விசேட கடற்­றொழில் துறை­மு­கமும் இங்கு ஏற்­ப­டுத்­தப்­படும். கட்­டு­நா­யக்க விமான நிலையம் ஊடாக உங்­க­ளது இந்த உற்­பத்­தி­களை வெளி­ நாட்டுச் சந்­தை­க­ளுக்கு அனுப்ப வசதி செய் ­யப்­படும்.

இவ்­வாறு உங்­க­ளுக்கு பல்­வேறு நன்மைதரும் வேலைத்­திட்­டங்கள் அடங்­கிய ஒரு திட்­டத்­தையே நாம் முன்­வைத்­தி­ருக்­கின்றோம். இவை­களால் உங்­க­ளது எதிர்­காலம் சிறப்­பாகும். இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்தவை பிர­த­ம­ராக்­கு­மாறு கோரி ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பினர் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளனர். இவை­களின் பக்கம் அவ­தா­னத்தைச் செலுத்தி நீங்கள் சரி­யான தீர்­மா­னத்தை எடுக்க வேண்டும்.

பொதுச் சொத்­துக்­களைத் திருடும் ஒரு பிர­த­ம­ருடன் அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வதா? அல்­லது திருட்­டுக்­களில் ஈடு­ப­டாத ஊழ­லற்ற பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்கம் ஒன்றை ஏற்­ப­டுத்திக் கொள்­வதா? தனது குடும்­பத்தின் சிறப்­பான எதிர்­கா­லத்­திற்­காக மாத்­திரம் செயற்­ப­டு­கின்ற பிர­தமர் ஒரு­வ­ருடன் அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்க வேண்­டுமா அல்­லது உங்கள் குடும்­பத்தின் சிறப்­பான எதிர்­கா­லத்­திற்­காகப் பணி­யாற்­று­கின்ற பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்­டுமா? தொழில்­ து­றை­களை ஏற்­ப­டுத்திக் கொள்ள முடி­யாத, வெளி­நாட்டு முத­லீ­டு­களைக் கொண்­டு­வர முடி­யாத, ஐரோப்பிய நாடு­க­ளுக்கு கடல் உற்­பத்­தி­களை அனுப்ப முடி­யாத பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்­டுமா? அல்­லது  தொழி­லுக்­கான வழி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கக் கூடிய, வெளி­நாட்டு முத­லீ­டு­களைக் கொண்டு வரக்­கூ­டிய, ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் கடற்­தொழில் உற்­பத்­தி­க­ளுக்­கான தடையை நீக்கிக்கொள்ள முடி­யு­மான பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்­டுமா என்­பதை நீங்கள் தீர்­மா­னிக்க வேண்டும்.

விரும்­பி­யவாறு சட்­டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்­ப­டு­கின்ற பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வாக்­க­ளிக்க வேண்­டுமா? அல்­லது இந்­நாட்டின் சட்­டத்தை உரிய முறையில் நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வாக்­க­ளிக்கப் போகின்­றீர்­களா? மிகவும் நியா­ய­மான முறையில் செயற்­படக் கூடிய பிர­தமர் ஒரு­வ­ருடன் அமையப் போகும் அர­சாங்­கத்­திற்­காக வாக்­க­ளிக்கப் போகின்­றீர்­களா என்­பது பற்றி சிந்­தி­யுங்கள்.

இவை­களை ஒப்­பிட்டுப் பாருங்கள். அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­யைக் குறைக்க முடி­யாத பிர­த­ம­ரையும், அர­சாங்­கத்­தையும் உரு­வாக்க வேண்­டுமா? அர­சாங்க ஊழி­யர்­களின் சம்­ப­ளத்தை அதி­க­ரிக்க முடிந்த, அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை­யைக் குறைக்க முடிந்த பிர­த­ம­ரு­ட­னான அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்­டுமா? நாட்டு மக்­களின் வரு­மா­னத்தை அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­கான வழி­களை ஏற்­ப­டுத்திக் கொடுக்கும் பிர­த­ம­ருடன் கூடிய அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டுமா என்­பதை மக்கள் சிந்­திக்க வேண்டும்.

பெண்­க­ளுக்கு தொல்­லைகள் கொடுக்கும், பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளுக்கும், வல்­லு­றவுக் குற்­றங்­க­ளுக்கும் உடந்­தை­யாக இருக்கும் பிர­தமர் ஒரு­வ­ருடன் கூடிய அர­சாங்கம் இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா? அல்­லது பெண்­களை மதிக்கும், பெண்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் பெண்­களின் உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்கம் இந்­நாட்டில் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா? இந்­நாட்டில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளுக்கு தொல்­லை­களைக் கொடுத்து அவர்கள் இந்­நாட்டில் சுதந்­தி­ர­மாக வாழ்­வ­தற்கு இட­ம­ளிக்­காத, அவர்­களின் மத உரி­மை­களை பாது­காக்­காத பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்கம் அமைய வேண்­டுமா? அல்­லது இந்­நாட்டு மக்கள் அனை­வ­ரையும் சம­மாக மதித்துச் செயற்­படும், எல்லா இன மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழ வழி­யேற்­ப­டுத்திக் கொடுக்கும், மத உரி­மை­களை பாது­காக்கும் பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்கம் அமைய வேண்­டுமா என்­பது பற்றி மக்கள் சிந்­தித்து வாக்­க­ளிக்க வேண்டும்.

மாற்று கொள்­கை­களைக் கொண்­ட­வர்கள், எதி­ராக எழு­து­ப­வர்­களை அடக்கி, வெள்ளை வேன்­களில் அவர்­களைக் கடத்திச் செல்லும் பிர­தமர் ஒரு­வ­ரையும், அர­சாங்கம் ஒன்­றையும் ஏற்­ப­டுத்த வேண்­டுமா? அவ்­வா­றில்­லாமல் எவ்­வா­றான கருத்­துக்­க­ளை வெளி­யி­டு­வ­தற்கும், எழு­து­வ­தற்கும், பேசு­வ­தற்கும் உரிய சுதந்­தி­ரத்தை வழங்கும் பிர­தமர் ஒரு­வ­ரு­ட­னான அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்த வேண்­டுமா? என்­பதையும் தீர்­மா­னி­யுங்கள்.

இவை­கள் தான் வரும் 17 ஆம் திகதி நீங்கள் சிந்­திக்க வேண்­டிய விட­யங்கள். இவை­களைப் பற்றிச் சிந்­தித்து இந்தத் தேர்­தலில் நீங்கள் வாக்­க­ளிக்க வேண்டும். மஹிந்தவையும், கூட்­ட­ணி­யையும் தெரிவு செய்து கொள்­வதா? அல்­லது இந்­நாட்டில் சரி­யான முறையில் செயற்­படக் கூடிய ஒரே கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்­சி­யையும், என்­னையும் தெரிவுசெய்ய வேண்­டுமா என்­பதைப் பற்றித் தீர்­மா­னித்து வாக்களியுங்கள்.

இம்­மாதம் 17 ஆம் திகதி புதிய அர­சாங்­கத்தை அமைக்க இந்த புத்­தளம் மாவட்­டத்தில் அதி­கப்­ப­டி­யான ஒத்­து­ழைப்பை எனக்கு வழங்­குங்கள். சிலா­பத்தை வெற்றி பெறச் செய்­யுங்கள். இங்கு சிறந்த வேட்­பா­ளர்­களை நாம் நிறுத்­தி­யி­ருக்­கின்றோம். இத்­தேர்­தலில் நீங்கள் உங்­களைப் பற்றிச் சிந்­தித்து வாக்­க­ளி­யுங்கள்.

இந்தத் தேர்தல் கடந்த ஆட்சிக் காலங்­களில் இடம்­பெற்ற தேர்­தல்­களைப் போன்­ற­தொரு தேர்­த­லல்ல. மக்­க­ளுக்கு பொருட்கள் விநி­யோ­கிக்­கப்­ப­ட­வில்லை. சமுர்த்தி உத்தி யோகத்தர்கள் வீடு வீடாக அனுப்பப்பட வில்லை. பொலிஸார் தமது கடமைகளை உரிய முறையில் செய்கிறார்கள். அவர்களின் கடமைகளுக்கு எவ்வித அழுத்தங்களும் வழங்கப்படவில்லை.

இவைகள்தான்  நல்லாட்சியில் இடம் பெற்ற மாற்றங்கள். இவ்வாறான மாற்றங் கள் தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமா அல் லது ஜனாதிபதியும், பிரதமரும் முரண் பட் டுக்கொள்ள வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த போட்டி யிடுகின்றார். அவர் வெற்றிபெற்று பிரதமரா னால் பிரதமரும், ஜனாதிபதியும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையே ஏற்படும். அத னால்  உங்களது எதிர்காலத்தை நாசமாக் கிக் கொள்ள வேண்டாம். இதுதான் நாம் உங்களுக்கு வழங்க வேண்டிய தகவலாகும் என்றார்.

Related Post