முஸ்லிம் பிரதேசங்களில் தற்போது புதிது புதிதாக உருவாகும் இனவாத அச்சுறுத்தல்களை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொள்ள முஸ்லிம் சட்டத்தரணிகள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற தயார் என் அறிவித்துள்ளனர்.
அந்தவகையில் முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட ஆர்.ஆர்.டி.அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் இதனை Jaffna Muslim இணையத்திடம் தெரிவித்தார்.
கீழ்வரும் இலக்கங்கள் மூலமாக தொடர்புகொள்ளலாம்
இனவாத ரீதியாக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அல்லது பள்ளிவாசல்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் பற்றிய விடயங்களை மாத்திரமே முறையிடுங்கள்.
இந்த சட்டத்தரணிகள் மேற்கொண்டு செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பார்கள்
சிலவேளைகளில் நீங்கள் தொலைபேசி அழைப்பெடுக்கும் போது அவர்கள் பதிலளிக்காவிட்டால் நீங்கள் சம்பவம் குறித்து ஒரு SMS அனுப்புங்கள் அவர்கள் உங்களுக்கு மீண்டும் தொலைபேசி அழைப்பு எடுப்பார்கள்.