Breaking
Tue. Jan 7th, 2025

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், தவுலகல வட்டாரத்தில் அமைந்துள்ள அம்பரபொல டீன் சைட் தோட்டத்து வீதியை கொங்கிரீட் பாதையாக செப்பனிடும் பணிகள் நேற்று (25) ஆரம்பமானது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக, உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 150,000 மூலமாக இந்த அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உடுநுவர தேர்தல் தொகுதியில் அமைந்திருக்கும் ரகுபெத்த பாதை செப்பனிடுதல் மற்றும் பாலம் அமைத்தல் தொடர்பான கலந்துரையாடலொன்றும் நேற்று உடுநுவர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார் அவர்களினால் இது சம்பந்தமாக மாகண பொறியியலாளருக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஏற்கனவே இந்த பாதை மற்றும் பாலம் சம்பந்தமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், உடனடியாக பாதை மற்றும் பாலம் ஆகியவற்றை செப்பனிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு மாகாண பொறியியலாளருக்கு அறிவுருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

Related Post