எலன் மெதினியாராமயவின் மாநாயக்கதேரர் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தம்மாலோக்க தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் சட்ட மா அதிபர், புலனாய்வு பிரிவினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வழக்குத் தொடர்வது குறித்த குற்றப்பத்திரிகை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உயர் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களின் அடிப்படையிலும், பொது சொத்து துஸ்பிரயோக சட்டத்தின் அடிப்படையிலும், அனுமதிப்பத்திரமன்றி யானைக் குட்டி வைத்திருந்த சட்டத்தின் அடிப்படையிலும் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
இதேவேளை, விரைவில் கொழும்பு உயர் நீதிமன்றில் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்குத் தொடரப்படவுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.