சதி வலையில் எர்தொகான் உயிர் தப்பிய சம்பவம்:
அந்த இரவில் அவர் விடுமுறைக்காக தங்கியிருந்த பிரத்தியேக மர்மரிஸ் ரிஸோர்ட் இற்குள் 25 சதிப்படை வீரர்கள் ஹெலிகொப்டர்களில் இருந்து கயிறுகள் மூலம் இறங்கிவிடுகின்றனர்.
அங்கே அவர்கள் துப்பாக்கி பிரயோகங்களையும் மேற்கொண்டனர்.
ஆனால் இறைவனின் உதவியால் அவர்கள் அங்கு வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாகவே எர்தொகான் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியிருந்தார்!
இருந்தும் ஆபத்து நீங்கிவிடவில்லை, அவர் அங்கிருந்து பயணம் செய்த விமானம் (business Jet) பின்னர் வானில் வைத்து சதிகாரர்கள் பயன்படுத்திய இரண்டு F 16 ஜெட்களின் ராடாருக்குள் வருகிறது!
ஆனாலும் அது எர்தொகான் பயணிக்கும் விமானமென்று உறுதியாக தெரிந்து கொள்ளாத சதிகாரர்கள் அதனை இலக்கு வைக்க ஆயத்தமாகும் போதே எர்தொகானை சுமந்து சென்ற விமானி, விமான தொடர்பாடல் மூலம் ( radio communication ) இந்த F 16 விமானங்களுக்கு ஒரு தகவலை அவசரமாக அனுப்பியுள்ளார்.
அந்த தகவல் அவர்களை திசை திருப்பியது!
எர்தொகானின் உயிரையும் காத்தது!
அது என்ன தகவல்?
“இந்த விமானம் துருக்கி எயார்லைன்சுக்கு சொந்தமான பயணிகள் விமானம்”
என்பதே அந்த விமானியின் செய்தியாகும்.
பொய் ஒரு உண்மையை காத்திருக்கிறது!!!