பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதயகம்மன்பில போன்ற திருடர்கள் ஜாதிக ஹெல உறுமயவில் கட்சி உறுப்பினர்களாக இருந்தமைக்கு வெட்கப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அத்துடன் உதயகம்மன்பில இதற்கு முதலிலும் சிறைத்தண்டனை அனுபவித்த நபர் எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 2000ஆம் ஆண்டுக்கு முன் உதயகம்மன்பில என்ற ஒரு அரியல்வாதி இருப்பதே இலங்கை மக்களுக்கு தெரியவில்லை என்றும் ஜாதிக, ஹெல உறுமயவே அவரை இலங்கையின் அரசியல்வாதியாக அறிமுகப்படுத்தியது என்றும் ஹெல உறுமயவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், உதயகம்மன்பில தொடர்பான வழக்கிற்கு சரியான தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இது வெளிநாட்டுப் பிரஜை தொடர்பான வழக்கு எனவே குறித்த வழக்கிற்கான சரியான தீர்ப்பை பெற்றுக்கொடுக்குமாறு நீதிமன்றிடம் கேட்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையானது குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.