Breaking
Mon. Dec 23rd, 2024

எம்­பி­லிப்­பிட்­டிய பொலிஸ் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்த உதவிப் பொலிஸ் அத்­தி­யட்சர் டீ.டப்­ளியூ.சி.தர்­ம­ரத்ன மற் றும் எம்­பி­லி­ப்பிட்­டிய பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் எஸ்.ஆர்.ஜே.டயஸ் ஆகி­யோரை உட­ன­டி­யாகக் கைது­செய்­யு­மாறு நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு எம்­பி­லி­பி­டிய நீதவான் நீதி­மன்றின் மேல­திக நீதிவான் பிர­சன்ன பெர்­ணான்டோ இந்த உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி இரவு எம்­பி­லி­பி­டிய பகு­தியில் இடம்­பெற்ற விருந்து நிகழ்­வொன்றின் போது, பொலி­ஸா­ருக்கும் மக்­க­ளுக்கும் இடையில் இடம்­பெற்ற மோதலில் படு காய­ம­டைந்த இளம் குடும்­பஸ்தர் ஒருவர், உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்­பி­லேயே இவர்­களைக் கைது செய்ய நீதவான் உத்­த­ர­விட்­டுள்ளார். இத­னுடன் தொடர்­பு­டைய ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் கைது­செய்து அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­து­மாறும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

எம்­பி­லி­பிட்­டி­யவில் குறித்த விருந்­து­ப­சா­ரத்தின்போது மூன்று மாடிக் கட்­டி­டத்தில் இருந்து சந்­தே­கத்­துக்கு இட­மான முறையில் உயி­ரி­ழந்த ஒரு பிள்­ளையின் தந்­தை­யான சுமித் பிர­சன்ன ஜய­வர்­த­னவின் மரண விசா­ர­ணைகள் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் எம்­பி­லி­பிட்­டிய நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­றன. இதன் போதே நீதிவான் மேற்­படி உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்தார்.

நேற்­றைய விசா­ர­ணை­களின் போது, உயி­ரி­ழந்த இளை­ஞரின் மனைவி சாட்­சியம் அளித்தார். இதன்போது உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் தர்­ம­ரத்ன, பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக செயற்­பட்ட டயஸ் ஆகியோர் மீது தமக்கு சந்­தேகம் உள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார். இத­னை­ய­டுத்தே நேற்று(27) வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்­க­ளுக்கு அமை­வாக சந்­தேக நபர்­களை கைதுச் செய்­யு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார். அத்­துடன் குறித்த பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு மேல­தி­க­மாக குற்றம் சாட்­டப்­படும் ஏனைய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் கைது செய்து அடை­யாள அணி­வ­குப்­புக்கு உட்­ப­டுத்­து­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

நேற்­றைய விசா­ர­ணை­களின்போது பொலிஸ் தினைக்­களம் சார்பில் தற்­போது விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த நிலையில் இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் உறுப்­பி­னர்கள் பலரும் சுயா­தீ­ன­மாக மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

விருந்­து­ப­சா­ரத்தில் பொலிஸார் மது­பானம் கேட்­ட­தா­கவும் அதனை வழங்க மறுத்த கார­ணத்­தினால் இந்த மோதல் வெடித்­த­தா­கவும் அதன் போது குறித்த இளைஞர் பொலி­ஸாரால் மாடியில் இருந்து தள்ளி வீழ்த்தி கொலை செய்­யப்­பட்­ட­தாக ஒரு தரப்­பினர் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர்.

பொது­மக்­களின் அமை­திக்கு பங்கம் ஏற்­படும் வகையில் செயற்­பட்ட கார­ணத்­தினால் பொலிஸார் அந்த இடத்­திற்கு சென்­ற­தாக பொலிஸ் தரப்பு தெரி­விக்­கின்­றது.

எனினும் தற்­போது குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில் பொலிஸார் அங்கு தாமா­கவே சென்­றுள்­ள­துடம் எவரும் விருந்­து­ப­சாரம் குறித்து முறைப்­பா­ட­ளிக்­க­வில்லை என்­பதும் தெரி­ய­வந்­துள்­ளது. இந் நிலை­யி­லேயே நேற்று மன்றில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட சாட்­சி­யங்­க­ளுக்கு அமைய உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்இ தலைமை பொலிஸ் பரி­சோ­தகர் உள்­ளிட்ட பொலி­ஸாரை கைது செய்ய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்பட்­டுள்­ளது.

By

Related Post