Breaking
Tue. Dec 31st, 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிண்ணியா நகர சபை  உறுப்பினர் நிசார்டீன் முகமட் ஏற்பாட்டில், “Nisardeen Trophy – 2018” வெற்றிக்கிண்ணத்துக்கான உதைப் பந்தாட்டச் சுற்றுப் போட்டியின், இறுதிப் போட்டி பெரியாற்று முனை, ரேன்ஞர்ஸ் மைதானத்தில் நேற்று (28) வெகுவிமர்சையாக நடை பெற்றது.

திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன், வெற்றியாளர்களுக்கு கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது அப்பிரதேசத்தின் மூத்த வீரர்கள் கௌரவிக்கப்பட்டமை அங்கு பிரதான நிகழ்வாக அமைந்திருந்ததுடன், பிரதேச மக்களினால் இது பெரிதும் பாராட்டை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில், கந்தளாய் பிரதேச சபை உதவி தவிசாளர் சட்டத்தரணி மதார், கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான கலீபத்துல்லா, நிவாஸ், நிஹால் அஹமட், தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பினர்களான  தாலிப் அலி ஹாஜியார், ரெஜீன், மக்கள் காங்கிரஸ் மூதூர் பிரமுகர் சியான் (PHI), கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில காலகே மற்றும் கிண்ணியா இராணுவ முகாம் பொறுப்பதிகாரி திஸாநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

(ன)

 

Related Post