Breaking
Sun. Dec 22nd, 2024

பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா வெஹர ரஜமஹா விகாரையை உலகெங்கிலுமுள்ள பௌத்த மக்கள் தரிசிப்பதற்குப் பொருத்தமான வகையில் புனர்நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (28) பிற்பகல் ஆரம்பமானது.

இப்புனர்நிர்மாணப் பணி எழுச்சி பெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்திக் கருத்திட்டத்துடன் இணைந்ததாக பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள புன்னிய ஸ்தானங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நேற்று பிற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க உனகலா ரஜமகாவிகாரைக்குச் சென்ற ஜனாதிபதி சமய நிகழ்வுகளில் பங்குபற்றி ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வரலாற்று முக்கியத்துவமிக்க உனகல வெஹர புனர்நிர்மாண நடவடிக்கைகளை ஆரம்பித்து வைப்பதற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி நட்டினார்.

இதனை நினைவுகூறும் வகையில் விகாரை வளாகத்தில் ஒரு நாக மரக்கன்றையும் ஜனாதிபதி நட்டினார். அதனைத் தெடர்ந்து இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி பொலன்னறுவை நகரின் பண்டைய கீர்த்தியை மீண்டும் கொண்டுவந்து அங்குள்ள சகல வரலாற்று முக்கியத்துவமிக்க புண்ணிய ஸ்தானங்களையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொல்லியல் பெறுமானங்களையும் பண்டைய பெருமைகளையும் பாதுகாத்து மகாசங்கத்தினரின் ஆலோசனையுடன் கல்விமான்களின் வழிகாட்டலில் அந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விகாராதிபதி சங்கைக்குரிய கிரித்தலே ஞாநீஸ்ஸர நாயகக்க தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் பிரதேச அரசியல் பிரதிநிதிகள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

By

Related Post