திருகோணமலை மாவட்ட சேருவில பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சேருவில பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது சேருவில பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் முஜீப் தலைமையில் நேற்று (26) இடம் பெற்ற இக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றியும் அபிவிருத்தி திட்டங்கள்,எதிர் கால திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டன
இதில் உரையாற்றிய திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப்
உப்பூறல் கரையோரப் பகுதியில் உள்ள காணிகளில் சுமார் 200 ஏக்கர் காணிகள் உப்பு உற்பத்தி நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்பட வேண்டும் இதனால் உப்பு உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து நாட்டின் அந்நியச் செலவாணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடனான ஏற்றுமதி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிவதோடு இப் பிரதேசத்தில் உள்ள சிங்கள,தமிழ்,முஸ்லிம் இளைஞர் யுவதிகளுக்கு பல ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும் உள்ளூர் உற்பத்திகள் வெளிநாடுகளிலும் குறிப்பாக தென்கிழக்காசிய, அரேபிய நாடுகளில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது .ஆணையிறவு தொடக்கம் குச்சவெளி போன்ற இடங்களிலும் உப்பு உற்பத்தி காணப்பட்டாலும் கூட அதை விடவும் தரமான உற்பத்தியினை இப்பிரதேசத்தில் மேற்கொள்ள முடியும். சேருவில, ஈச்சிலம்பற்று, மூதூர் போன்ற பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பல ஆயிரக்கணக்கான யுவதிகள் இதனால் நன்மையடைவார்கள்.
மேலும் நீலாக்கேணி காடு செல்வநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளில் ஐம்பது வீட்டுத் திட்டம் வழங்குவதற்கான அடிக்கல் நட்டப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் அனுமதிகள் பெற்றும் கூட அதனை நடை முறைப்படுத்த முடியாமல் இதற்கு தடங்கள் ஏற்படுகிறது. 2013 வர்த்தமானி மூலமான அறிவித்தல் விடுத்தும் இதனை வனஜீவராசிகள் திணைக்களம் தடைகளை ஏற்படுத்துகிறது. இது விடயமாக ஜனாதிபதி,பிரதமர்,வீடமைப்பு அமைச்சர் ஆகியோர்களிடத்தில் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் மேலும் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த இந் நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம்,முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி கலபதி,முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த ,முன்னால் மாகாண சபை உறுப்பினர் டாக்டர் அருணசிறிசேன,சேருவில பிரதேச சபை தவிசாளர் ரணசிங்க பண்டார உள்ளிட்ட அரச அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.