Breaking
Mon. Nov 18th, 2024

உப்பு உற்பத்தியில் இன்னும் இரு வருடங்களுக்குள் இலங்கை தன்னிறைவு அடையுமென்றும் அதற்கான பல்வேறு திட்டங்களையும் கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தென்னாசிய செயற்பாட்டு தளத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுத் தலைவர் தலைவர் சுதிர் என் முரளிதாஸ் தலைமையிலான தூதுக்குழுவினர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை இன்று (22) மாலை சந்தித்துப் பேசிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 ஐ நா செயற்பாட்டு நிர்வாகம் இலங்கையில் முன்னெடுத்து வரும் திட்டங்கள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சருடன் விரிவாக கலைந்துரையாடிய போது அமைச்சர் தமது அமைச்சின் செயற்திட்டங்கள் தொடர்பான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டார். இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி எம் கே பி தென்னகோனும் கலந்து கொண்டார்.

அமைச்சர் இங்கு கூறியதாவது,

ஐக்கிய நாடுகள் செயற்பாட்டு நிறுவனம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் மேற்கொண்டு வரும் வெற்றிகரமான பணிகளுக்காக நான் எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த சர்வேதச நிறுவனமானது எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இருக்கின்றன. அவைகளை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட தீவாக இருக்கின்ற போதும் எங்கள் நாட்டிலே உப்பிற்கு தட்டுப்பாடே நிலவுகின்றது. உப்பை நாங்கள் இறக்குமதி செய்கின்ற துர்ப்பாகிய நிலையிலேயே இன்னும் இருக்கின்றோம். எனவே எமது கடல் வளத்தைப் பயன்படுத்தி உப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்கு நாம் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத்தை வளப்படுத்துவதற்கு அங்கேயுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். எனவே ஐ நா செயற்பாட்டு நிறுவனம் இந்த முயற்சிக்கு உதவுவதோடு கிழக்கிலும் நாங்கள் அடையாளங்கண்டுள்ள பிரதேசங்களில் உப்பு விளைச்சலை அதிகரிக்க உதவ வேண்டும்.

அத்துடன் இலங்கையின் தோல் பொருட்கள் பதனிடும் தொழிற்சாலையை நிறுவுவதற்கும் ஐநா செயற்பாட்டு நிறுவனத்தின் உதவியை கோருகின்றோம். இந்த முயற்சியில் இலங்கை அரசும் வழங்குனர்களும் ஐ நா செயற்பாட்டு நிறுவனமும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் உரிய இலக்கை அடைய முடியுமென அமைச்சர் தெரிவித்தர்.

7m8a7647

By

Related Post