Breaking
Fri. Jan 10th, 2025

பிரபல உப்புத் தொழிற்சாலை நிறுவனத்துக்கு, திருகோணமலையில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த 1050 ஏக்கர் நீர்ப் பிரதேசத்தை விடுவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

திருகோணமலை, நிவாவெளி, இறக்க கண்டி, கும்புறுபிட்டி, குச்சவெளி சிறுமீன்பிடி கைத்தொழிலாளர்களின் தொழிலைத் தடையின்றி மேற்கொள்ளும் பொருட்டே, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால், அன்றாட ஜீவனாம்சங்களில் ஈடுபடும் சிறுமீனவர்கள், தங்களது தொழிலை முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் என்பதுடன், அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியே இது என்றும் அவர் கூறினார்.

(ன)

Related Post