இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுமதிப் பத்திரங்கள் கிடைத்தவுடன் அவற்றை பரீட்சார்த்திகளுக்கு விநியோகிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
பரீட்சார்த்திகளின் நலன் கருதி உயர்தரப் பரீட்சை அனுமதிப் பத்திரங்களில் புதிதாக மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை இலக்கம், பாடப் பிரிவு. மற்றும் பரீட்சை நிலைய இலக்கம் என்பன அனுமதிப் பத்திரத்தில் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரையும், ஆகஸ்ட் 24 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் எட்டாம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இம்முறை பரீட்சையில் மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து 69 பேர் தோற்றவுள்ளனர்.
-NF-