கடந்த ஆட்சியின் பொன்சேகாவை சிறைக்கு இழுத்துக்கொண்டு சென்றது போல நாமல் சிறைக்கு இழுத்துக்கொண்டு செல்லபடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
கொத்தடுவையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரே நாளில் இலங்கையின் உயர்நீதிமன்றில் இரண்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு தீர்ப்பு சரி என்றும்,மற்றைய தீர்ப்பு பிழைஎன்றும் கூட்டு எதிர்கட்சி கும்பல்கள் கோசமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹிந்தவின் ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டு எரிபொருள் விலையினைக் குறைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட வேளை, அன்றைய ஜனாதிபதி மஹிந்த அதனை காதிலும் வாங்கவும் இல்லை எரிபொருள் விலையை குறைக்கவும் இல்லை என மரிக்கார் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சரத்பொன்சேகாவையோ, நீதியரசர் சிரானி பண்டார நாயக்கவையோ நடாத்தியது போல் தமது அரசாங்கம் நாமலை நடாத்தவில்லை என்றும், சட்டத்திற்கு அமையவே நாமல் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமைச்சர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு நாட்டு மக்கள் பலரும் கருத்து தெரிவித்த வேளை, தனது தந்தையார் மஹிந்தவின் காலில் விழுந்து மன்னிப்புகோர வேண்டும் என நாமல் தெரிவித்திருந்தமை யாராலும் மறக்க முடியாத நிலையில், அன்றைய உயர்நீதிமன்றம் சுயாதீனமாக செயற்பட்டதா?
இன்றைய உயர்நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றதா? என அனைவரும் தெரிந்துக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.