தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. இலங்கை வருவதை தடைசெய்தமைக்கு எதிராக சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத் இன்னும் சில தினங்களில் உயர் நீதிமன்றம் செல்லவுள்ளது.
தவ்ஹீத் ஜமாத் செயலாளர் ராசிக், துணைச் செயலாளர் மௌலவி ரஸ்மின் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினர்
சிங்கள, முஸ்லிம் சட்டத்தரணிகளின் உதவியுடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் குடிவரவுகுடியகல்வு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டவுள்ளது.
தவ்ஹீத் ஜமாத் ஏற்பாடுசெய்த நிகழ்வில் பீ.ஜே. வருவதற்கு இலங்கை முஸ்லிம் விவகார திணைக்களம் அனுமதியளித்திருந்தது.
அத்துடன், உத்தியோகபூர்வமற்ற முறையில் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் போதும் தவ்ஹீத் ஜமாத் பீ.ஜே.யை இலங்கை அழைத்து வருவதற்கு அனுமதியளிக்கப்ட்டிருந்தது. இறுதிவரை அந்த நம்பிக்கையுடனே தவ்ஹீத் ஜமாத்தும் செயற்பட்டது.
மேலும் பீ.ஜே.யின் இலங்கை வருகை எந்தவகையிலும் இலங்கையின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையமாட்டாது என்பதையும் பாதுகாப்பு அமைச்சு ஒத்துக்கொண்டிருந்தது.
இருந்தபோதும் இறுதி நேரத்தில் பீ.ஜே.வருகைக்கு இலங்கை பாதுகாப்பு அமைச்சு தடைவிதித்தது.
இவ்வாறான நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராட்சி, குடிவரவு பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராகதவ்ஹீத் ஜமாத் நீதிமன்றம் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளது.