Breaking
Sun. Dec 22nd, 2024

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்தி தாக்கல் செய்யப்­பட்ட மனு­வொன்றின் கார­ண­மாக உயர் நீதி­மன்­றத்­தினால் தனக்கு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்தை அமைப்­பது குறித்துசபா­நா­ய­க­ரினால் தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதற்கு அமை­வான தீர்­மா­ன­மொன்றும் பாரா­ளு­மன்­றத்­தினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் அந்த தீர்­மா­னத்தை நீதி­மன்­றத்தின் கேள்­விக்கு உட்­ப­டுத்­து­வது சிறப்­பு­ரிமை மீற­லா கும். ஆகவே சபா­நா­யகர் இம்­மனு தொடர்­பாக தீர்ப்­பொன்றை உயர் நீதி­மன்­றத்­திற்கு அறி­விக்க வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­க­ிர­ம­சிங்க கோரிக்கை விடுத்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை இயற்கை அனர்த்தம் தொடர்­பான விசேட விவா­தத்­திற்­காக சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது.

இதன்­போது சிறப்­பு­ரிமை பிரச்­சி­னையை முன்­வைத்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபா­நா­யகர் உட்­பட முழு சபையின் கவ­னத்­திற்கும் இந்த விடயத்தை கொண்டு வந்­தி­ருந்தார்.

அவர் குறித்த மனு தொடர்பில் விளக்­க­வுரை ஆற்­று­கையில், “

ரியர் அட்­மிரல் சரத் வீர­சே­கர மற்றும் பேரா­சி­ரியர் விம­ல­தர்ம அபே­விக்­ரம ஆகி­யோரால் எனக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட மனு­வொன்­றுக்கு அமை­வாக அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான வகையில் எனக்கு அழைப்­பா­ணையும் விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய அர­சாங்கம் தொடர்­பான தீர்­மானம் மற்றும் அந்த தீர்­மா­னத்­துக்கு எந்தெந்த அர­சியல் கட்­சிகள் அவ­சியம் என்­பது குறித்து சபா­நா­ய­கரால் 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 3 ஆம் திகதி தீர்ப்­பொன்று வழங்­கப்­பட்­டது. அதன் பிர­காரம் தான் தீர்­மானம் சபை­யினால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டது. தற்­போது அந்த விடயம் அனைத்தும் நிறை­வுக்கு வந்­து­விட்­டன. சபா­நா­ய­கரின் தீர்ப்பை இனி கேள்­விக்கு உட்­ப­டுத்த முடி­யாது. இது இந்த சபையின் அதி­கா­ரங்­களின் அங்­க­மாகும்.

சபா­நா­ய­க­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பின் பிர­காரம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் தொடர்­பாக பதி­ல­ளிப்­ப­தற்­காக என்­னையோ அல்­லது எனது சார்­பான சட்­டத்­த­ர­ணி­யையோ நீதி­மன்­றத்தின் முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்த ஒரே­யொரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்றும் மனு­தாரர் தன்மை மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

தேசிய அர­சாங்­க­மொன்று எவ்­வாறு அமைக்­கப்­பட வேண்டும் என்ற ஒட்­டு­மொத்­த­மான தீர்­மா­னத்­தையும் அவர் கேள்­விக்­குட்­ப­டுத்­தி­யுள்ளார். எனினும் குறித்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டதை அவர் இங்கு குறிப்­பி­ட­வில்லை. பாரா­ளு­மன்­றத்­தினால் மேற்­படி செயல்­நோக்கு கொண்ட தீர்­மா­ன­மா­னது சட்­டத்தின் பிர­காரம் அமுலில் கிடை­யாது எனவும் மனுவில் மனு­தாரர் சுட்டிக் காட்­டி­யுள்ளார். இது­போன்ற பல்­வேறு விட­யங்கள் இம்­ம­னுவில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அவை அனைத்தும் அர­சியல் அமைப்­பினால் எமக்கு அளிக்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களின் பிர­காரம் சபா­நா­ய­க­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்­பையும் பாரா­ளு­மன்­றத்­தினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தையும் கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தற்கு ஒப்­பா­ன­தா­க­வுள்­ளன. இந்த சபை­யினால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை கேள்­விக்­குட்­ப­டுத்­து­வ­தா­னது சிறப்­பு­ரி­மையை மீறும் செய­லாகும். அத்­துடன் இது திட்­ட­மி­டப்­பட்டு செய்­யப்­பட்ட செய­லாகும். காரணம் சபா­நா­ய­க­ரினால் வழங்­கப்­பட்ட தீர்ப்பு மனுவில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

மனு­தாரர் இந்த சபையில் உறுப்­பி­ன­ராக இருந்­தவர் என்ற வகையில் அது தொடர்பில் அவர் நன்கு அறிந்­தி­ருக்க வேண்டும். அதை விடுத்து தமக்கு தெரி­யாது என கூற­மு­டி­யாது. மேலும் சபைக்கு அளிக்­கப்­பட்­டுள்ள நீதி­மன்ற அதி­கா­ரங்கள் உள்­ளிட்ட பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்கள் குறித்த மனுவில் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. எனவே மனு­தா­ரர்கள் இரு­வரும் வேண்­டு­மென்றே சிறப்­பு­ரி­மை­மீறல் விட­யத்தை கவ­னத்தில் எடுத்து அது தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்க வேண்டும். அந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்திற்கும் அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

இதேவேளை குறித்த வேண்டுதலை தாமும் முன்வைப்பதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க மற்றும் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து தெரிவித்தனர். இது இவ்வாறு இருக்க குறித்த விடயம் தொடர்பில் அதன் போது ஆராய்ந்து பார்க்க சிறு கால அவகாசமொன்றை தருமாறு சபாநாயகர் கருஜயசூரிய உறுதிப்படத் தெரிவித்தார்.

By

Related Post