Breaking
Wed. Mar 19th, 2025

மலேசியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை தாக்கிய ஐந்து பேரையும் விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று (5) கைது செய்யப்பட்ட இந்த ஐந்து பேரையும் புதன்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காகவே இவர்களை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக சோலாங்கூர் பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றம் 26 வயதிற்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post