ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தச் சட்டச் சிக்கலுமில்லை என்று உயர் நீதிமன்றம் வழங்கிய விளக்கம் இன்னமும் நாடாளுமன்றத்துக்குக் கிடைக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.