“சிறுவனை பார்த்த போது உயிருடன் இருக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டினேன். ஆனால் உயிரிழந்து காணப்பட்டான்’ என்று துருக்கி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட சிறுவனின் சடலத்தை எடுத்த துருக்கி பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் இடம்பெறும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டு மக்கள் துருக்கி வழியாக அண்டை நாடான ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
ஆனால் தனது நாடுகளில் அகதிகள் குடியேறுவதை ஐரோப்பிய நாடுகள் வண்மையாக எதிர்த்து வந்தன.
இந்நிலையில் துருக்கி கடற்கரையில் கடலில் உயிரிழந்து கிடந்த சிறுவனின் புகைப்படம், உலகையே சோகத்தில் உலுக்கி விட்டது. இதனையடுத்து ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் தொடர்பான நிலைப்பாட்டிலும் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் கடலில் பலியாகிக்கிடந்த குழந்தை அய்லான் சடலத்தை எடுத்த பொலிஸ் அதிகாரி மெக்மெட் சிப்லாட் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
“என்னுடைய சொந்த மகன் என்றே நினைத்தேன்,”என்று கூறிஉள்ளார். மெக்மெட் சிப்லாட் பேசுகையில், “
சிறுவனை பார்த்ததும் அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றே கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். சிறுவன் உயிருடன் இருப்பான் என்றே நம்பினேன். ஆனால் சிறுவன் சடலமாக கிடந்தான். நான் அழுதுவிட்டேன். எனக்கும் 6 வயதில் மகன் உள்ளான். சிறுவனை பார்த்ததும் என்னுடைய மகனை போன்றே நினைத்தேன். என்னுடைய துன்பத்தை கூறுவதற்கு வார்த்தையே கிடையாது. மிகவும் சோகமாக இருந்தது என்றார்.
மேலும் சிறுவனின் உடலை தூக்கி எடுத்த போது எனக்கு புகைப்படம் எடுக்கப்படுகின்றது என்பதை அறிந்திருக்கவில்லை. நான் என்னுடைய பணியைதான் செய்தேன் என்றும் மெக்மெட் குறிப்பிட்டுள்ளார்.