Breaking
Mon. Dec 23rd, 2024

– க.கிஷாந்தன் –

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று (10) உயிருடன் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நேற்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டு உயிருடன் பிடித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தை குட்டியை மீட்டு கொண்டு செல்லும் வழியில் அது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By

Related Post