Breaking
Fri. Nov 15th, 2024

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் கொள்கை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தாரை­வார்க்­கப்­பட்­டுள்­ளது. உண்­மை­யான சுதந்­திரக் கட்சியின் கொள்­கை­யுடன் பண்­டா­ர­நா­யக்­கவின் சமா­திக்கு முன்னால் செல்­வதை கௌர­வ­மாக நினைக்­கின்றேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக்ஷ் தெரி­வித்தார்.

ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சின் பாத­யாத்­திரை நேற்று ஹொர­கொல்­ல பகுதியே தாண்­டும்­போது ஊட­க­வி­ய­லா­ளர்­களால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே நாமல் ராஜபக்ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

உண்­மை­யான சுதந்­திர கட்­சியின் கொள்­கை­யுடன் கூடிய ஆட்­சியை ஏற்­ப­டுத்­தவே நாங்கள் பாத­யாத்­திரை மேற்­கொண்டு செல்­கின்றோம். இன்று சுதந்­தி­ரக்­கட்­சியின் கொள்கை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தாரை­வார்க்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் மக்கள் மீது சுமையை ஏற்­ப­டுத்தி, மீன­வர்­களை நிர்க்­க­திக்­குள்­ளாக்­கி­யுள்ள மக்கள் விரோத இந்த ஆட்­சியை வீட்­டுக்கு அனுப்பி மக்கள்மய­மிக்க ஆட்­சியை ஏற்­ப­டுத்­துவோம்.

அத்­துடன் எமது பேரணியில் செல்வோர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் நிறு­வுனர் எஸ். டபிள்யு.ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்­கவின் சமா­திக்கு கல்­லெ­றி­வார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க எண்­ணி­யது தவ­றாகும். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை விட்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க வெளி­யேறும் போது தனது தந்தை மஹிந்த ராஜ­பக்ஷ கட்­சியில் இருந்தார். கட்­சியின் கொள்­கையே அவரை பாது­காத்­தது.

அத்­துடன் கட்­சியின் கொள்­கையை பாது­காக்க போராடும் நாங்கள் கட­சியின் நிறு­வு­ன­ரான பண்­டா­ர­நா­யக்­கவின் சமா­திக்கு முன்னால் செல்­லும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கின்­றது. அதனை கௌர­வ­மாக நினைக்­கின்றோம். அத்­துடன் இந்த பாத­யாத்­திரை காலில் வீக்கம் வரும்­வரை இடம்­பெறும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். சுதந்­திர கட்­சியன் கொள்­கையை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தாரை வார்த்துக் கொடுப்­ப­தாயின் கால் வீங்கும் வரை­யல்ல, உயிர் பிரியும் வரை போரா­டுவோம் என்றார்.

By

Related Post