Breaking
Sun. Dec 22nd, 2024

அகமட் எஸ். முகைடீன்

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பயணத்தில்  கைகோற்பதற்கான கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப் படிவம் வினியோகிக்கும் நிகழ்வு குறித்த கட்சியின்  பிரதி தேசிய அமைப்பாளரான கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது சாய்ந்தமருது வாசஸ் தலத்தில் நேற்று (28/05/2015) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப் படிவமானது சிராஸ் மீராசாஹிபினால் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது  ஶ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆரம்கால  போராலிகள் பலர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டனர்.  ​

மேலும் இகட்சியின் அங்கத்துவத்தினைப் பெறுகின்ற ஆண், பெண் இருபாலாரும் கட்சியினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்களில் முன்னுருமைப்படுத்தப்படுவர் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

கட்சியின்  அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ள பெருந்திரளான மக்கள்  கூடியிருந்த இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளருமான துல்சான், மை ஹோப் நிறுவனத்தின் உருமையாளரும் கட்சியின் முக்கியஸ்தருமான சித்தீக் நதீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ac (1)

ac.jpg2_ ac.jpg2_.jpg3_ ac.jpg2_.jpg3_.jpg4_

Related Post