Breaking
Sun. Dec 22nd, 2024
தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 50 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 10 இராஜாங்க அமைச்சர்களும், 30 பிரதி அமைச்சர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதில் 10 முஸ்லிம் மற்றும் 5 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடம் பிடித்துள்ளனர். எனினும் இவர்களுக்கு ஒதுக்கப்படவுள்ள அமைச்சுக்களின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

எதிர்வரும் நான்காம் திகதியளவில் அமைச்சர்களின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர், பிரதி அமைச்சர் பதவிகளை பெற்று கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பெயர் பட்டியல் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைச்சர்கள் விபரம்:

1. றிஷாத் பதியூதீன் -கெபினட் அமைச்சர்

2.ஏ.எம்.பௌசி – கெபினட் அமைச்சர்

3.கபீர் ஹஷீம் – கெபினட் அமைச்சர்

4.ரவுப் ஹகீம் – கெபினட் அமைச்சர்

5. மொஹமட் ஹலீம் – கெபினட் அமைச்சர்

6 பைஸர் முஸ்தபா – இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்

7. அமீர் அலி – இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர்

8. மொஹமட் நவாவி – பிரதி அமைச்சர்

9. மொஹமட் மஹரூப் – பிரதி அமைச்சர்

10.ஹிஸ்புல்லா – பிரதி அமைச்சர்

தமிழ் அமைச்சர்கள்!

01. பீ.திகாம்பரம் -கெபினட் அமைச்சர்

02. தொண்டமான் -கெபினட் அமைச்சர்
03. டீ.எம்.சுவாமிநாதன் – புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர்
04. ராதா கிருஷ்னன் – பிரதி அமைச்சர்
05. வடிவேல் சுரேஷ் – பிரதி அமைச்சர்

Related Post