Breaking
Sun. Jan 12th, 2025

பழுலுல்லாஹ் பர்ஹான்

30 வருட யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிலிருந்து விடுபட முதற்கட்டப் பணிகளை கடந்த ஐந்து வருடங்கள் அபிவிருத்திக்கு பெரும் தொகை நிதியை செலவிட்டு நாட்டை கட்டியெழுப்பப் பாடுபட்டார்.

இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் நடைபெற்ற பொது நிகழ்வில் சிறப்புரையாற்றுகையில் தெரிவித்தார்.

காத்தான்குடி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற தேசிய மர நடுகை தேசத்திற்கு நிழல் திட்டத்தை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தபின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இந்த கருத்தை வெளியிட்டார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்து பேசுகையில்

எதிர்வரும் ஜனவரி முதல் மக்களை கட்டியெழுப்புகின்ற ,வறுமையை போக்குகின்ற வளமான மக்களை உருவாக்கும் பாரிய வேலைத் திட்டமொன்றினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் எமது அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

ஆசியாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக எமது நாட்டைக் கட்டியெழுப்ப உறுதியான தலைமைத்துவமும் உறுதியான அரசும் தேவை ஆட்சியும் தேவை இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாம் தற்போது கொண்டிருக்கின்றோம்.

இந்த அரசை தோற்கடிப்பதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு யுத்தத்தை உருவாக்கவும் நாட்டைகுட்டி சுவராக்கவும் சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன இதற்கு நாம் ஒரு போதும்இடமளிக்கக்;கூடாது. எமக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு இந்த நாட்டைகட்டியெழுப்பவும்,வறுமையை ஒழிக்கவும் கிடைத்துள்ளது.

இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமை சமாதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தி அடைந்த நாடாக இப்பிராந்தியத்தில் முன்னெற வேண்டுமாயின் உறுதியான அரசும் ஜனாதிபதியும் எமக்குத் தேவை இதனாலே ஜனாதிபதியையும் அரசையும் தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளமுடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆகவே இந்த சூழ் நிலையில் நாம் உறுதியாகவிருந்து உறுதியான அரசை உறுதியான ஆட்சியை இந்த நாட்டில் வைத்துக்கொள்வதனூடாக நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

நமது மாவட்டம் வறுமையில் மிக கூடிய மாவட்டம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் வறுமையை ஒழிக்கும் திட்டங்களை எமது மாவட்டத்தில் அமுல்படுத்தவுள்ளோம் பாரிய நிதிந் செலவில் உள்நாட்டு உதவிகளை இதற்கு செலவிடவுள்ளோம் வீடு வீடாகச் சென்று சுமார் 2000 உத்தியோகத்தர்களைக் கொண்டு எமது மாவட்டத்தின் வறுமை இனம் காணப்பட்டுள்ளது என மேலும் குறிப்பிட்டார் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

Related Post