Breaking
Mon. Dec 23rd, 2024

சென்னை மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் ராஜாக்கனி, யுனிவர்சல் பதிப்பகத்தின் உரிமையாளர் ஷாஜகான் ஆகியோர் கூறியதாவது:இஸ்லாமிய ஆண்டின் துல்கஜ் மாதத்தின் 10–ம் நாளில் ஹஜ்ஜூப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

வானில் தெரியும் பிறையை பொறுறுத்து ஹஜ்ஜூப் பெருனாள் தினம் முடிவு செய்யப்படும்.இந்த ஆண்டுக்கான பிறை கடந்த 15–ந்தேதி தொடங்கியது. அதாவது 14–ந்தேதி இரவு தெரிந்த பிறையின் அடிப்படையில் மறுநாள் தீர்மானிக்கப்பட்டது.

வழக்கமாக வளைகுடா நாடுகளில் முதலிலும், அதை தொடர்ந்து ஆசிய, ஐரோப்பிய நாடுகளிலும் ஹஜ் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டு அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் முதல் பிறை தெரிந்ததால் உலகம் முழுவதும் ஒரே நாளில் அதாவது வருகிற 24–ந்தேதி ஹஜ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என இவர் தெரிவித்தார்கள்

Related Post