Breaking
Tue. Dec 24th, 2024

தினசரி வேலைகளுக்கு லேப்டாப் மட்டும் போதும் என எண்ணுகின்றீர்களா? உங்களுக்கான முதுகில் மாட்டும் பை அறிமுகமாகியுள்ளது.

வேலைக்காகவே, கல்விக்காகவோ, புதிய ஊருக்குள் குடிபுகுந்து, மாபெரும் லேப்டாப் பேகை முதுகில் மாட்டி, கூட்ட நெரிசலான பேருந்திலும், ரெயிலிலும் ஏறுபவர்களுக்குத்தான் தெரியும், பொதுமக்களின் கோபப்பார்வையைப் பற்றி!

இத்தகைய சூழலிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த உலகின் மிக ஒல்லியான முதுகில் மாட்டும் பேக்ப்பேக் கைக்கொடுக்கும் என நிச்சயம் நம்பலாம்!

இதற்குள், ஒரு லேப்டாப், நோட்டு மற்றும் அதன் சார்ஜர் அல்லது ஸ்மார்ட்போன் போன்றவற்றை வைத்துக்கொள்ள தனித்தனியே இடம் உள்ளது. எனினும், ஒல்லியாகவே இருக்கும், இந்த முதுகில் மாட்டும் பை, குளிர்ச்சியாகவே உள்ள மேலை நாடுகள் பலவற்றிலும் ஜாக்கெட் போன்ற மேலாடைகளுக்கு உள்ளேயே மாட்டிக் கொள்ளும் வகையில் இது உள்ளது.

அமெரிக்க இளைஞரால், மக்களிடம் தொண்டு வாங்கி தொடங்கப்பட்ட இந்த பேக், விற்பனைக்கு வந்த ஒரு வாரத்துக்குள், உருவாக்கத்திற்கு ஆன தொகைக் காட்டிலும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

By

Related Post