Breaking
Mon. Dec 23rd, 2024

உலகில் உள்ள பிரசித்தி பெற்ற உணவகங்களை பற்றிய செய்திகளுடன் அவற்றை தரவரிசைப்படுத்தி பட்டியலிடும் பிரபல பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சிறந்த 50 உணவகங்களை தேர்வு செய்து வருகிறது.

உலகில் உள்ள சுமார் ஆயிரம் சமையல் கலைஞர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், சமையல் கலை எழுத்தாளர்கள் ஆகியோர் கொண்ட தேர்வு குழுவினர் சிறந்த உணவகங்களை தேர்வு செய்கின்றனர்.

அவ்வகையில், கடந்த (2015) ஆண்டுக்கான தலைசிறந்த உணவகமாக இத்தாலி நாட்டின் மாடென்னா நகரில் உள்ள  ஆஸ்டெரியா பிரான்செஸ்கானா (Osteria Francescana) உணவகம் தேர்வாகியுள்ளது.

கடந்த ஆண்டு முதல் இடத்துக்கான பரிசை பெற்றிருந்த ஸ்பெயின் நாட்டின் கிரோனா நகரில் உள்ள எல் செல்லெர் டி கேன் ரோக்கா இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இலெவென் மேடிசன் பார்க் ரெஸ்டாரன்ட் மூன்றாம் இடத்தையும், பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள சென்ட்ரல் ரெஸ்டாரன்ட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நான்காவது இடத்திலும் வந்துள்ளது.

இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள 50 உணவகங்களில் சரிபாதி ஐரோப்பிய நாடுகளிலும், 12 உணவகங்கள் அமெரிக்க நாடுகளிலும், ஐந்து உணவுகங்கள் ஆசிய நாடுகளிலும் அமைந்துள்ளன.

By

Related Post