ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிராவை தயாரித்துள்ளது.
1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமிராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிரும் சுழலக்கூடிய இந்த கேமிரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-பை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமிராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக ஸ்மார்ட்போனுக்கு அனுப்பப்படுகிறது.
அதற்காக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் மூலம் உடனடியாக படம் பிடித்துக் கொண்டிருக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களிலோ, மின்னஞ்சலிலோ பகிர்ந்து கொள்ள முடியும். அதிகபட்சமாக 420 பிக்சல்கள் வரை படங்களை ஓரளவுக்கு தெளிவாக படம் பிடிக்கிறது இந்த குட்டி கேமிரா. வீடியோ மட்டுமில்லாது பிக்சர்களையும் எளிதாக எடுக்க முடியும். ஆனால், இதில் 150 எம்.ஏ.எச் அளவே பேட்டரி இருப்பதால் 20 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 5-7 நிமிடங்கள் வரை மட்டுமே இந்த கேமிராவால் வானில் பறக்க முடியும்.
பிளைட் சென்சிட்டிவிட்டியை பொறுத்து 3 அளவுகளில் பறக்கும் வேகத்தை நாம் கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள 6 ஆக்சிஸ் சைரோ ஸ்டெபிலைசேசன் தொழில்நுட்பம் குட்டி கேமிராவை சுமந்து செல்லும் மிகச்சிறிய விமானத்தை காற்றின். வேகத்தால் ஸ்தம்பித்து விடாமல் நிலையாக பறக்க உதவி செய்கிறது. இரவு நேரங்களில் பறக்க விடும் போது நாம் எளிதாக இந்த குட்டி கேமிராவை கண்காணிக்கும் வகையில் கலர் கலரான எல்.இ.டி. பல்புகளும் உள்ளன.
இந்த குட்டி கேமிரா விமானத்தின் எடை 0.55 பவுண்டுகளுக்கும் குறைவாக இருப்பதால் இதை பறக்கவிட அதிக அளவில் கட்டுப்பாடுகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 7-ந்தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த குட்டி விமான கேமிரா ப்ரீ ஆர்டர் அடிப்படையில் 75 டாலர்களுக்கு விற்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மதிப்பில் இது ரூ.10828 ஆகும்.