Breaking
Wed. Dec 25th, 2024

நீங்கள் படத்தில் பார்க்கும் திருமறை குர்ஆனின் பிரதி தான் உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதியாகும்.

இதற்கு முன்பு ரஷ்யாவின் ததாரிஸ்தானில் இருந்து வரும் இரண்டு மீட்டர் நீளமும் ஒன்றரை மீட்டர் அகலமும் கொண்ட திருமறை பிரதிதான் உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதியாக கருத பட்டது.

தற்போதைய புதிய பிரதி 500 கிலோ  கிராமை கொண்டதாகும். 2.28 மீட்டர் நீளத்தையும் 1.55 மீட்டர் அகலத்தையும் கொண்ட 218 பங்கங்களை கொண்டு இந்த பிரதி தொகுக்க பட்டுள்ளது.

இந்த சாதனை பிரதியை ஆப்கானை சார்ந்த முஹம்மது சாபிரின் பெயரில் ஆப்கானுக்கான மார்க்க துறைகளுக்கான அமைச்சகம் பதிவு செய்தள்ளது . இது பற்றி முஹம்மது ஸாபிர் கூறும் போது:-

“உலகிலேயே மிக பெரிய திருகுர்ஆன் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எண்ணினேன். இதற்காக எனது மாணவர்கள் ஒன்பது பேர் எனக்கு பேருதவிகளை செய்தனர். இதை தயாரிப்பதற்கு சுமார் ஐந்து இலட்சம் அமெரிக்கடாலர்கள் செலவானது” எனவும்  தெரிவித்தார்.

article-2086167-0F6E228100000578-300_964x640 article-2086167-0F6E235000000578-485_964x600 article-2086167-0F6E25C800000578-759_964x600 afp_afghanistan_kuran_12Jan12-878x584

Related Post