வழக்கம் போல உலக பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடுகள் குறித்து விவரத்தை ஹுரன் குளோபல் ரிச் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 2014ம் ஆண்டில் இந்தியாவில் கோடிசுவரர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்தது பல வருடமாக 3ம் இடத்தில் இருந்த ரஷ்யாவை இந்த முறை 4ம் இடத்துக்கு பின் தள்ளி முதல் முறையாக டைப் 3 இடத்துக்கு வந்து உள்ளது.ஆனாலும் உலகத்தில் இருக்கும் பாதி கோடிசுவரர்கள் அமெரிக்கா,சீனா வில் உள்ளனர் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
இந்திய கோடீசுவரர்கள் பட்டியலில் இந்த வருடமும் முகேஷ் அம்பானி 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மேலும் உலகளவில் இவர் 41-வது இடத்தில் உள்ளார்.
ரஷ்யாவின் பொருளாதார நிலை மற்றும் அரசியல் நிலையில் சற்று மந்தமாக இருப்பதால் 2014-ஆம் ஆண்டில் இந்நாட்டின் வர்த்தகத்தில் தொய்வு ஏற்பட்டது. இதன் மூலம் ரஷ்யாவின் கோடீசுவரர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் 93 ஆக உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 365 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடதக்கது.
ஹூரன் குளோபல் ரிச் லீஸ்ட் 2015 இந்த அறிக்கையில் 68 நாடுகளின் 2,089 கோடீசுவரர்களின் பற்றிய தகவல்களை வெலியிட்டு உள்ளனர்.. 649 பேரின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது, 869 பேரின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது, 230 பேர் சொத்து மதிப்பில் மாற்றம் இல்லை, 341 புது முகங்கள் மேலும் 95 பேர் இந்த வரிசையில் இருந்து வெளியேறினார்கள்.
மேலும் இப்பட்டியலில் டாப் 3 கோடீசுவரர்களாக பில் கேட்ஸ், கார்லோஸ் ஸ்லிம், வாரன் பாபெட் ஆகியோர் உள்ளனர். இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 244 பில்லியன் டாலர்.