Breaking
Tue. Dec 24th, 2024

வேற்றுகிரக வாசிகள் இருக்கிறார்களா இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள் நம்மை போன்று இருப்பார்களா அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்கள் இது போன்ற எண்ணற்ற கேர்ள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்று பதிலளித்து உள்ளனர்.

வேற்று கிரக வாசிகள் நமக்கு அருகிலோ, வெகு தொலைவிலோ நம்மை போலவே ஒரு கூட்டம் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது. ஆனால், அவர்கள் உணவு சாப்பிட்டு, தண்ணீர் குடித்து நம்மை போலவே இருப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் வேறு மாதிரியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

சேத் ஷோஸ்டாக் விஞ்ஞானி கூறும் போது இன்னும் 25 ஆண்டுகளில் நாம் அவர்களை நேரில் சந்திக்கலாம் என கூறி உள்ளார். உலக அரசுகள் வேற்று கிரகவாசிகளை ரகசிய மறைவிடத்தில் வைத்து கண்காணித்து வருவதாகவும். உலக அரசாங்கங்கள் வேற்று கிரக வாசிகளின் வாழ்க்கையை மனித இனத்திடம் இருந்து மறைக்கிறார்கள் என கூறி உள்ளார். முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி கூறினார்.

கனடா நாட்டின் முன்னாள் பாதுகாப்பு துறை மந்திரி பால் ஹெல்யர் (வயது 91) 1963 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை கனடாவின் பாதுகாப்பு துறை மந்திரியாக இருந்தார்.

குறைந்தது 4 வகையான வேற்று கிரக வாசிகள் மற்றும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பூமிக்கு வந்து இருக்கலாம் இது குறித்த தகவல்களை ஒப்புகொள்ள வேண்டும் என உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.

டோராண்டோ கல்கேரி பல்கலைக்கழகத்தில் நடந்த கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பால்ஹெல்யர் கூறியதாவது:—

பல செய்தி ஊடகங்கள் இந்த விஷயங்களை தொடுவது இல்லை.நீங்கள் வேலையை விட்டு வந்து இருக்க வேண்டும். சிலர் வெகுஜன பார்வை கிடைக்கும் என நம்பும் செய்திகளையே தேடுகிறார்கள்.மிஸ்டர் ஜனாதிபதி, மிஸ்டர் பிரதமர் எங்களுக்கு உண்மை வேண்டும். நமக்கு இப்போது அது தேவை ஏனெனில் அது நமது வாழ்க்கையை பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்

வேடிக்கையான இந்த கூற்றுகள் குறித்து ஹெல்யர் கேள்வி எழுப்புவது இது முதல் முறையல்ல.இவர் முதல் முறையாக 2005 ஆம் ஆண்டு வேற்று கிரகவாசிகள் குறித்து பேச ஆரம்பித்தார்.

மேலும் அவர் கூறும் போது “வேற்று கிரகவாசிகள் ஆயிரகணக்கான ஆண்டுகள் நமது கிரகத்திற்கு வருகிறார்கள். அவர்களது வாழ்க்கை முறை நமது வாழ்க்கை முறையை விட சிறப்பாக இருக்கும்.” என்று கூறினார்.

இதற்கு முன் ஹெல்யர் கூறும் போது “உண்மையில் அவர்கள் நம்முடனேயே பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கலாம் நம்மைபோலவும் இருக்கலாம், அவர்கள் நம்முடன் தெரிவில் சேர்ந்து நடக்கலாம் உங்களை கடந்து அவர்கள் சென்று இருக்கலாம் உங்களுக்கு அது தெரியாது என” கூறியதாக ரஷ்யா டுடே கூறி உள்ளது.

Related Post