Breaking
Fri. Nov 15th, 2024

உலக ஆசிரியர் தினம் இம்முறை ஆசிரியர்களை வலுப்படுத்தி நிலையான சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

ஆசிரியர் தினமானது நாட்டுக்கு நாடு வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது.

அதனடிப்படையில் இலங்கையில் ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  ஆசிரியர்கள் வெறுமனே கல்வியை மட்டுமே கற்பிப்பவர்கள் அல்ல. மாறாக அவர்கள் வலுவான, நிரந்தரத்தன்மையுடைய சமூகத்தை கட்டியெழுப்ப காரணமாயிருப்பதுடன் கற்றல் அறிவினூடாக மூலமாக ஆக்கத் திறன் மிக்க சமூகத்தை கட்டியெழுப்புகின்றனர்.

மேலும் ஒழுக்க விழுமியங்கள்,  கோட்பாடுகளை  தொடர்ச்சியாக கொண்டு செல்ல காரணமாயிருக்கின்றனர் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

 யுனெஸ்கோவின் புள்ளிவிபரவியல் மதிப்பீட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வையடுத்து 2020 ஆம் ஆண்டாகும்போது உலக நாடுகளில் 12.6 மில்லியன் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளல் என்ற நோக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post