Breaking
Wed. Dec 25th, 2024

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு இம்மாதம் 11 ஆம், 12 ஆம், 13 ஆம் திகதிகளில் கொழும்பு-7 சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்ற மண்டபத்தில் நடைபெறுகிறது. இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் தொடக்க விழா எதிர்வரும் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 04 மணி முதல் இரவு 08 மணிவரை அல்ஹாஜ் மசூர் மௌலானா அரங்கில் இடம்பெறவுள்ளது.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ. ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களும், சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்சிரஸ் தலைவர் அமைச்சர், ரிஷாத் பதியுதீன், மக்கள் காங்கிரசின் தவிசாளர் பிரதி அமைச்சர் அமீர் அலி, தமிழ் நாடு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். ஐ. ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வரவேற்புரையை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பொருளாளர் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் நிகழ்த்துகின்றார்.

தொடக்கவுரையை அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், தலைமையுரையை காப்பியக்கோ. ஜின்னா ஷரிபுத்தீனும் ஆற்றுகின்றனர். ஆசி உரைகளை மலேசியாவைச் சேர்ந்த மௌலானா முகம்மது அப்துல் காதிர் அல்காதிரி அவர்களும், சங்கைக்குரிய தொலஸ்வல தம்மிக தேரோ அவர்களும், அருட்திரு பாஸ்டர் ஜோன் லோகநாதன் அவர்களும், இந்துமத குருக்கள் சங்கத்தின் தலைவர் சிவஸ்ரீ கே. வைத்தீஸ்வர குருக்கள் அவர்களும் வழங்குகின்றனர்.

சிறப்புரைகளை தமிழ்நாடு தொண்டு இயக்கத்தின் தலைவரும் பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவருமான பேராசிரியர் சே. மு. மு முகம்மது அலி அவர்களும் தமிழ்நாடு தமிழ் பல்கலைக்கழக த்துணைவேந்தர் பேராசிரியர் க. பாஸ்கரன் அவர்களும் நிகழ்த்துகின்றனர்.

இந்த தொடக்க விழாவின் சிறப்பம்சமாக மாநாட்டு மலர் வெளியிட்டு வைக்கப்படுகின்றது. இந்த சிறப்பு மலரை அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடமிருந்து புரவலர் ஹாஷிம் உமர் பெறுகிறார். அதன்பின்னர் ஆய்வுக் கோவையை பிரதி அமைச்சர் அமீர் அலியிடமிருந்து காஸிம் பரீட் ஜாபர்தீன் பெறுகிறார். தொடர்ந்து விருது வழங்கல் இடம்பெருகின்றது. அதன் பின்னர் அதிதிகளில் ஒருவரான பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லாஹ் உரையாற்றுகிறார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உரையை அடுத்து நன்றியுரையுடன் முதல் நாள் தொடக்க விழா இனிதே நிறைவு பெறுகிறது. நன்றியுரையை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகயவத்தின் உப செயலாளர் கவிஞர் நியாஸ். ஏ. சமத் பகர்கின்றார்.

இரண்டாம் நாள் நிகழ்வு அடுத்ததினமான 12 ஆம் திகதி திங்கட்கிழமை இல 38, பிரங்போர்ட் பிளேஸ் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சுபுட் (ளுரடிரன) மண்டபத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வை கலாநிதி யு+சுப் கே. மரைக்கார் அங்குரார்ப்பணம் செய்கின்றார். “வி. ஏ. கபு+ர் – ரைத்தளாவளை அஸீஸ்” அரங்கில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் “இஸ்லாமும் கலைகளும்” என்ற தொனிப் பொருளில் ஆய்வு நடைபெறுகிறது. கலாநிதி எம். ஏஸ். எம் ஜலால்தீன், எஸ் முத்து மீரான் இணைத் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் நோக்குனர்களாக ரஹ்மத் ராஜகுமாரன், கவிஞர் வாழைச்சேனை அமர் ஆகியோர் பணியாற்றுகின்றனனர்.

அடுத்து இரண்டாம் அரங்கான “எம். ஏ. கபு+ர் – கே. ஏ. ஜவாகர் அரங்கில்” சினிமா பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. பேராசிரியர். ஏம். எஸ். எம். அனஸ், உமா வரதராஜன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் நோக்குனர்களாக கலைஞர் கலைச் செல்வன் கவிஞர் கவிமதி ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

அடுத்து மூன்றாவது அரங்கான “எச்செம்பி. மொஹிதீன் – மருதூர்க் கனி அரங்கில்” இடம்பெறவுள்ள “எதிரெழுத்து” என்ற தொனிப்பொருளிளான ஆய்வரங்கிற்கு இணைத் தலைவர்களாக பேராசிரியர். சபா. ஜெயராசா, பேராசிரியர். றமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் தலைமைவகிக்கின்றனர். நோக்குனர்களாக தாழை மதியவன் கவிஞர் வே. எழிலரசு ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

அடுத்து அரங்கு 4ல் “வாழும் ஆளுமைகள்” என்ற கருப்பொருளிலான ஆய்வு நிகழ்வு “ஆ. கா. அப்துல் சமது- வித்துவான் எம். ஏ ரகுமான் அரங்கில்” முனைவர். ஜே. சதக்கதுல்லாஹ் கவிஞர் ஜவாத் மரைக்கார் ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெறவுள்ளது. நோக்குனர்களாக கவிஞர் ஏ. பீர். முஹம்மது. டாக்டர் எம் செம்மல் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

அதனைத் தொடர்ந்து அரங்கு 5ல் சமூக “நல்லிணக்கம்” என்ற தலைப்பிலான ஆய்வரங்கு “நீதிபதி மு.மு இஸ்மாயீல் – எஸ் எச் எம். ஜெமீல் அரங்கில”; கலாநிதி ஏ.எப் எம் அஷ்ரப், சட்டத்தரணி ஜி ராஜ குலேந்திரா ஆகியோரின் இணைத்தலைமையில் இடம் பெறுகிறது. நோக்குனர்களாக முனைவர் ரேவதி மற்றும் திருமதி வசந்தி தயாபரன் ஆகியோர் பணியாற்றுகிள்றனர்.

அதற்கு அடுத்த அம்சமாக அரங்கு 6ல் “தற்கால இலக்கியம்” என்ற தொனிப் பொருளிலான ஆய்வு நிகழ்வு “அன்பு முகைதீன் – ப ஆப்தீன் அரங்கில்” முனைவர் பரீதா பேகம் திக்குவல்லை கமால் ஆகியோரின் இணைத் தலைமையில் ஏற்பாடாகியுள்ளது. நோக்குனர்களாக முனைவர் கலைஞர் தமிழ்மணவாளன், கெக்கிராவ சஹானா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

திங்கட்கிழமைக் காலை இடம்பெறுகின்ற இந்த நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் அன்று மாலை இலங்கை மன்ற மண்டபத்தில் சுவாமி விபுலானந்த அரங்கில் பிற்பகல் 4 மணிமுதல் இரவு 8 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகள் எற்பாடாகியுள்ளன.

பிரதி அமைச்சர் அமீர் அலியின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர். ஏ.எச்எம் பௌசி அவர்களும் விஷேட அதிதிகளாக அமைச்சர் பைஸர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர். ஏம் எல் ஏ. எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் கலாசார திணைக்களப் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்ணான்டோ ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்வில் கவிஞர் சோலைக்கிளி வரவேற்புரையையும் தலைமை உரையை பிரதி அமைச்சர் அமீர் அலியும் சிறப்புரைகளை செய்யித் ஹஸன் மௌலானா,  தைக்கா நாஸிர் மௌலானா, பேராசிரியர். எம். எஸ் .எம். அனஸ், முனைவர் அமுதா பால கிருஷ்ணன் ஆகியோர் நிகழ்த்துகின்றனர்.

கண்டி சித்தி லெப்பை மாணாக்களின் கலை நிகழ்ச்சிகளும் நூல்கள் வெளியீடும் இடம்பெறுகின்றன. வாழைச்சேனை நண்பர் கலை இலைக்கிய வட்டத்தின் “நாடகமும்” கொழும்பு டீ. எஸ் சேனநாயக்க கல்லூரி மாணாக்கர்ளின் கலை நிகழ்வுகளும் இரண்டாம் நாள் நிகழ்வில் இடம்பெறுகின்றன. விருது வழங்கல் நிகழ்வையடுத்து விழாவின் விஷேட அதிதியான இராஜாங்க அமைச்சர். எம். எல். ஏ. எம் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றுகின்றார். அதன் பின்னர் வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் கவிஞர் என். நஜ்முல் ஹூசைன் நன்றியுரையினையாற்றுகின்றார்.

அன்றய விழாவின் விஷேட அம்சமாக “கவி. காமு. ஷரீப் – கவிஞர் ஏ. ஜி. எம் ஸதக்கா அரங்கில்” இன்ஷா அல்லாஹ் என்ற தலைப்பிலான கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மௌலவி கவிமணி எம். எச். எம் புகாரி அவர்களின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்த சிறப்க் கவியரங்கில் இப்னு அஸூமத், அஸீஸ் நிஸார்தீன், மன்னார் அமுதன், மஸூறா எ மஜீத், நாச்சியாதீவு பர்வீன், கவிஞர் ஜலாலுதீன் (இந்தியா), மர்ஸூம் மௌலானா, ஷாமிலா ஷரீப், சுஐப். எம். காசிம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இறுதிநாள் நிகழ்வு 13 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இலங்கை மன்ற மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. காலை 9 மணிமுதல் பிற்பகல் 1 மணி வரை “எஸ். எம். ஹனீபா – ஏம். எம் சமீம் அரங்கில்” இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஆய்வகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தாஸிம் அகமது தலைமை வகிக்கின்றார். பிரதம அதிதியாக பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லாஹ் களந்து கொள்கின்றார். வரவேற்புரையை கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் அவர்களும், தலைமையுரையை டாக்டர் தாஸிம் அவர்களும் நிகழ்த்துகின்றனர். தஞ்சாவு+ர் தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் சா. உதய சு+ரியன் முனைவர் கிருஷ்ணன், மலேசியா, மலாயயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்  முனைவர் சிருஷ்ணன் மனியம், கம்பவாரிதி. இ ஜெயராஜ், ஏர்வாடி இராதா கிருஷ்ணன், மலேசிய பல்கலைக்கழக இந்திய கற்கைகள் பீடத்தின் தலைவர் பேராசிரியர் மோகனதாஸ் இராமசாமி, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் ஆகியோர் முக்கிய தலைப்புக்களில் உரையாற்றுகின்றனர். அதிதியான பேராசிரியர் எம். எச் ஜவாஹிருல்லாவின் உரையைத் தொடர்ந்து கலாபு+ஷணம் எம். ஏ. எம் நிலாம் நன்றியுரை நிகழ்த்துகிறார்.

அன்றையதினம் பிற்பகல் 2.30 மணி முதல் 4 மணி வரை “எம். எச் குத்தூஸ் – இசைக்கோ நூர்தீன் அரங்கில்” செவிக்கு இனிமையு+ட்டும் இலங்கை இந்திய பாடகர்களின் இஸ்லாமிய பாடல்கள் இசைக்கப்படுகின்றன.

பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை மாநாட்டு நிறைவரங்கு ஹாஜி- ஏ.வி.எம் ஜாபர்தீன் அரங்கில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் பொதுச் செயலாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் இடம்பெறுகின்றது. இந்த நிறைவரங்கிற்கு பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றார். சிறப்பதிதிகளாக அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம், பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் ஆகியோரும் விஷேட அதிதியாக மலேசிய தொழில் அதிபர் காஸிம் பரீட் ஜாபர்தீனும் கலந்து கொள்கின்றனர்.

இந்த இறுதிநாள் நிகழ்வில் இலங்கை இஸ்லாமிய ஆய்வகத்தின் மூத்த துணைத் தலைவர் கவிஞர் அல் அஸூமத் வரவேற்புரை நிகழ்த்த, கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையுரையை நிகழ்த்துகிறார். ஏற்றுமதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் (வேதாந்தி), உற்பத்தித் திறன் முன்னாலள் அமைச்சர் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றுகின்றனர். விருது வழங்கல் நிகழ்வைத் தொடர்ந்து அதிதிகளின் உரைகள் இடம் பெறுகின்றன.

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் துணைத் தலைவர் எஸ். எம்.  என். எஸ். ஏ. மர்ஸூம் மௌலானா “மாநாட்டுப் பிரகடனம”; செய்கின்றார். நிறைவுநாள் நிகழ்வின் நன்றியுரையை ஆய்வகத்தின் ஊடகச் செயலாளர் செய்கு இஸ்மாயீல் முஸ்தீன் நிகழ்த்துகிறார்.

இந்த மூன்று நாள் நிகழ்ச்சினதும் தொகுப்பாளர்களாக சனூஸ் முகம்மது பெரோஸ், ஏ. ஆர். எம்.ஜிப்ரி, புர்கான் பி இப்திகார், ஏ. எல் ஜபீர், அகமட் எம் நஸீர், ஸாமிலா ஷரீப் ஆகியோர் பங்கேற்று உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நெறிப்படுத்துகின்றனர்.

02

By

Related Post