அஸ்ரப் ஏ. சமத்
உலக குடியிருப்பு தின தேசிய மாநாடு (06) கொழும்பு சுகாதாச விளையாட்டு உள்ளக அரங்கில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது தேசிய வீடமைப்பின் கொள்கைப் பிரகடணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் அமைச்சர் விமல் வீரவன்ச கையளித்தார்.
அத்துடன் உலக குடியிருப்பு தினம் பற்றி பாடசாலை மாணவர்களுக்கிடையில் மும்மொழிகளிலும் நடாத்திய போட்டிகளில் வெற்றிபெற்ற முதலாம் இடத்தை பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.