Breaking
Sun. Mar 16th, 2025
உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 1995ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற காரணிகளுக்கு விருது வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகரின் சூர்யா என்ற சமூக சேவை நிறுவனத்தினால் ஆற்றப்பட்ட சேவைகளை பாராட்டும் வகையில் கரு ஜயசூரியவிற்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

சமாதானத்திற்காக அர்ப்பணித்தல் மற்றும் சமூக சேவையாற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

விஸ்வ சாந்தி மற்றும் டொக்டர் அம்பேத்கர் ஆகிய இரண்டு விருதுகளே சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவில் வழங்கப்பட உள்ளது.

By

Related Post