உலக சுகாதார அமைப்பின் விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மலேரியா நோய் தொடர்பான நிலைமை குறித்து ஆராய்ந்து இலங்கை மலேரியா நோயை ஒழித்த நாடு என்பதை உறுதிப்படுவதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்க இந்த குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 27ஆம் திகதி இலங்கை வரும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிகள் இரண்டு வாரங்கள் இலங்கையில் தங்கியிருப்பார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் மலேரிய நோயாளர்கள் எவரும் கண்டறியப்படவில்லை எனவும் மருத்துவர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.