மலேரியா மற்றும் யானைக்கால் நோய்களிலிருந்து விடுதலை பெற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கை பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைக் குறித்து அவ் நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், அடுத்த வாரம் இறுதியில் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைகக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர். இலங்கையின் சுகாதார சேவை மற்றும் சர்வதேச ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றம் என்பவற்றினை கருத்தில் கொண்டே இவர்களது இவ் விஜயம் அமைந்துள்ளது.
பிரதிநிதிகளின் வருகையை தொடரந்து நடைபெறவுள்ள நிகழ்வில் இது குறித்து சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இத்தகைய பெருமையை நம் நாட்டுக்கு பெற்றுத் தந்ததில் அவ்வவ் துறை சார்ந்த வைத்தியர்களின் அர்ப்பணிப்பு முக்கியமானது என்பதைக் சுட்டிக்காட்டிய அமைச்சர் எதிர்வரும் 21 ஆம் திகதி உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து யானைக்கால் நோயற்ற இலங்கை என்ற பிரகடனத்திற்கான சான்றிதழை உத்தியோகபூர்வமாக கையளிக்கவுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மலேரியா அற்ற இலங்கை என்ற பிரகடனத்திற்கான சான்றிதழும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.