Breaking
Mon. Dec 23rd, 2024

உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் வரு­டாந்த கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பெரு நாட்­டுக்­கு விஜயம் செய்­துள்ளார்.

இம்­மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திக­தி­வரை நடை­பெறும் இம்­மா­நாட்டில் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுடன் திறை­சே­ரியின் செய­லாளர் கலா­நிதி ஆர்.எச்.எஸ். சம­ர­துங்க, மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் ஆகி­யோரும் இலங்­கையின் சார்பில் பங்­கேற்­கின்­றனர்.

உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் இந்த மாநா­டு­களின் 188 உறுப்பு நாடு­களின் நிதி­ய­மைச்­சர்கள், மத்­திய வங்­கியின் ஆளு­நர்கள் ஆகியோர் கலந்து கொள்­கின்­றனர். இதன்­போது உலக பொரு­ளா­தார விவ­கா­ரங்கள் தொடர்பில் பல்­வேறு தரப்­புக்­க­ளுடன் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்ளார்.

குறிப்­பாக அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு­களில் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, வறு­மைக்­குறைப்பு உலகப் பொரு­ளா­தாரம் உள்­ளிட்ட விட­ யங்கள் குறித்தும் இதன் போது கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் அதி­கா­ரி­க­ளுடன் இலங்­கைக்­கான உத­விகள் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார்.

இலங்­கை­யா­னது ஒவ்­வொரு வரு­டமும் உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்­தி­ட­மி­ருந்து 400 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான உத­வி­களைப் பெற்று வரு­கின்­றது. இதே­வேளை பெரு நாட்­டுக்கு பயணிக் கும் வழியில் நிதி­ய­மைச்சர் ரவி கருணாநாயக்க ஜப்பா னுக்கு சென்றதுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங் கவுடன் இணைந்து ஜப்பானில் இருதரப்பு பேச்சு வார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.

By

Related Post