Breaking
Fri. Nov 15th, 2024

– டீன் பைரூஸ் –

காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டினில் எதிர்வரும் 02.10.2015 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம் பெறவுள்ள ‘மாமறைக்கு ஓரு மாநாடு’ தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்று அதர் மஸ்ஜிதின் தலைவர் சகோதரர் எம்.றவுப் தலைமையில் 29.09.2015 செவ்வாய் இஷா தொழுகையின் பின்னர் தாருல் அதர் மஸ்ஜிதில் இடம் பெற்றது.

மேற்படி ஊடக சந்திப்பின் போது தாருல் அதர் மஸ்ஜிதின் தலைமை இமாம் பீ.எம்.அஸ்பர் (பலாஹி) பிரபல தென்னிந்தி மார்க்க பேச்சாளர் கோவை எஸ்.அய்யூப் உட்பட மஸ்ஜித் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதன் போது ஊடகவியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தென்னிந்தி மார்க்க பேச்சாளர் கோவை எஸ்.அய்யூப் காத்தான்குடி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை விடயத்தில் உலமாக்கிடையே போதிய விட்டுக்கொடுப்பு இல்லாமல் போய்விட்டது.

காத்தான்குடிஹஜ் பெருநாள் திடல் தொழுகை விடயத்தில் தாருல் அதர் சகோதரர்கள் பல முயற்சிகளை முன்னெடுத்தனர் அவ்வாறான சந்தர்பங்களில் நானும் உலமாக்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன். ஆனால் தௌஹீத் அமைப்புகள் தாங்கள் ஏற்கனவே எடுத்த தொழுகை தொடர்பான விடயத்தில் உறுதியாக இருந்தார்களே தவிர ஒற்றுமைக்காக விட்டுக் கொடுப்புடன் செயல்படவில்லை இதன் காரணமாகவே கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட துார எல்லைக்குள் 4 பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றதாகவும் கவலை தெரிவித்தார்.

தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஓற்பாட்டினில் எதிர்வரும் 02.10.2015 வெள்ளிக்கிழமை இடம் பெறவுள்ள இம்மாநாட்டில் உள்ளுர்இவெளியுர் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் தாங்கள் மேற் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லா மைதானத்திற்கான 4 நுழைவாயில் உள்ளன இதில் இரண்டு நுழைவாயில்களை விசேடமாக பெண்களுக்காக ஒதுக்கி இருப்பதாகவும் இதனால் பெண்கள் பாதுகாப்புடன் நிகழ்வில் கலந்து கொள்ள முடியும் என்பதுடன் பெண்கள் தொழுவதற்கான விசேட ஏற்பாடுகளை மேற் கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மாமறைக்கு ஓரு மாநாட்டில் மாற்று மத சகோதரர்களை அழைப்பது தொடர்பில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதுடன் தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஏழை மக்களுக்காக தையல் இயந்திரம் வழங்கள்இ மின்சாரம்இ குடி நீருக்கான வசதிகளை வழங்குவதுடன் ஊனமுற்றோர்களுக்கான சக்கர நாட்காளிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாகவும்

இம்மாநாட்டின் போது 14 தீர்மானங்கள் வாசிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இம்மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் அல்லாஹ்வின் உதவியுடன் எமது அமைப்பின் உள்ளுர் வெளியூர் சகோதரர்களின் பாரிய பங்களிப்புடன் இடம் பெறுவதாகவும் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.
வெளியுரிலிருந்து வரும் சகோதரஇசகோதரிகளுக்கு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி வரலாற்றில் இடம் பிடிக்கவுள்ள மாமறைக்கு ஓரு மாநாடு என்ற இம்மாபெரும் மாநாட்டில் அனைத்து சகோதரஇசகோதரிகள்இஉலமாக்கள்இமாணவர்கள்இபுத்திஜீவிகள்இமாற்று மத சகோதரா்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் நிருவாகத்தினர்.

Related Post