சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்களவர்கள் அதிகார மோகத்தினால் பிளவடைந்து வேறுபட்டிருக்கும் போது, ஏனைய தரப்பினர் தங்களது நலனை உறுதி செய்து கொண்டுள்ளனர்.
சிங்களவர்களின் அதிகார மோகத்தினால் எமது இளைய தலைமுறையின் எதிர்காலம் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி பாரிய வெற்றியை அடைந்துள்ளது.
நாட்டை நேசிக்கும் நாட்டை பாதுகாக்க விரும்பும் தரப்பினரை ஒன்றிணைத்துக்கொள்ள முடிந்துள்ளது.
எமது கட்சியை அறிமுகம் செய்ய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதில் வெற்றியடைந்துள்ளோம், எமக்கு ஊடகங்கள் உதவி செய்யவில்லை.
செலவழிப்பதற்கு பணம் இருக்கவில்லை. இவ்வாறான பின்னணியில் தேர்தலில் போட்டியிட்டோம். எனவே தேர்தலில் எமது இலக்குகள் ஈட்டப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் நாட்டுக்கு எதிரான சக்திகள் முழு வீச்சில் செயற்படும்.
இந்த ஆபத்து குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றோம். இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
நாட்டின் பெரும்பான்மை சமூக குறுகிய சுயநலவாத அடிப்படையில் செயற்பட்டு வருகின்றமை வருத்தமளிக்கின்றது என கலகொடத்தே ஞானசாரதேரர் தேர்தல் தோல்வி குறித்து அறிவித்துள்ளார்.