புத்தளம், உளுக்காப்பள்ளம் பாடசாலை நிர்வாகத்தினரினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கரம்பை வட்டார அமைப்பாளர் தன்வீரினதும் வேண்டுகோளுக்கிணங்க, கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் உளுக்காப்பள்ளம் பாடசாலைக்கு அண்மையில் (07) விஜயம் செய்திருந்தார்.
இதன்போது, பாடசாலையில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், பாடசாலை நிர்வாகத்தினர் உறுப்பினர் ஆஷிக்கிடம் முன்வைத்தனர். அந்தவகையில், விஷேடமாக பெண்களுக்கென்று ஓர் தனியான சிற்றுண்டிச்சாலையை அமைப்பதற்கான தேவைப்பாடு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அவற்றைக் கேட்டறிந்துகொண்ட உறுப்பினர் ஆஷிக், தனது சொந்த நிதியிலிருந்து சிற்றுண்டிச்சாலை அமைப்பதற்கான வேலையை உடனடியாக ஆரம்பிக்குமுகமாக நிதியுதவியை வழங்கி வைத்தார்.
அத்துடன், தொடர்ந்து பாடசாலையில் நிலவிவரும் வகுப்பறைப் பற்றாக்குறை, உள்ளகப்பாதை பிரச்சினை, மலசலக்கூடப் பிரச்சினை ஆகிய இன்னோரன்ன பிரச்சினைகளையும் கரம்பை வட்டாரத்துக்குப் பொறுப்பான அமைப்பாளர் தன்வீரின் ஊடாக, மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் உறுப்பினர் ஆஷிக் வாக்குறுதியளித்தார்.
(ப)