Breaking
Mon. Dec 23rd, 2024

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை  மன்னார் முசலி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், முசலி தேசிய பாடசாலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.

முசலி பிரதேச செயலாளர் கே எஸ் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி பரணகம, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம் வை தேஷபிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் டிமெல், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Post