கிழக்கு காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஐந்து மாத பலஸ்தீன கர்ப்பிணி பெண் ஒருவரும் அவரது மூன்று வயது மகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முற்றுகை நிலத்தில் 30 வயது நூர் ஹஸன் என்பவரும் அவரது மகளான ‘ஹ்தும் அவர் களது வீடு தகர்க்கப்பட்டதில் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் குறித்த பெண்ணின் குடும்பத்தினர் மூவர் காயமடைந்திருப்பதோடு இடிந்த கட்டடத்தில் மீட்பாளர்கள் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோன்று காசா எல்லையில் இடம்பெற்ற மோதலில் கடந்த சனியன்று இஸ்ரேல் இராணுவம் இரு பலஸ்தீன சிறுவர்களை சுட்டுக் கொன்றது. இஸ்ரேல் எல்லையை ஒட்டிய பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 மணி நேரத்திற்குள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தெற்கு காசாவின் கான் ய+னிஸ் பகுதியில் 13 வயது மர்வான் பர்பாக் மற்றும் 15 வயது ஒமர் உஸ்மான் என்ற இரு சிறுவர்களே இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக் காகி கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. காசா எல் லையில் இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் குறைந்தது 24 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் ஆரம்பம் தொடக்கம் இதுவரை மொத்தம் 20 பலஸ்தீனர்கள் கொல்லப் பட்டிருப்பதாகவும் காசாவில் ஒன்பது பேரும் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் ஆக்கிர மிப்பு கிழக்கு nஜரூசலத்தில் 11 பேரும் அடங்குவதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.