உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மேலும் காலம் தாழ்த்தாது உடனடியாக நடத்த வேண்டும்.
மக்களின் நிறுவனங்கள் தொடர்ந்தும் ஆணையாளர்களின் நிர்வாகத்தில் நடாத்துவது பிழையானது.
எந்தவொரு காரணத்திற்காகவும் தேர்தல் நடாத்துவதனை காலம் தாழ்த்தக்கூடாது.
எல்லை நிர்ணயம் குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையை ஜே.வி.பி நிராகரிக்கின்றது. எல்லை நிர்ணயம் குறித்த அறிக்கையானது குழப்பங்கள் நிறைந்தது.
அரசியல் தேவைகளின் அடிப்படையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே புதிதாக எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறு துரித கதியில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ள முடியாவிட்டால், பழைய முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நேற்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.