உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.