Breaking
Mon. Dec 23rd, 2024

முன்னைய அரசாங்கம் தமக்கு அனுகூலம் கிடைக்கும் வகையில் உள்ளுராட்சி மன்றங்களின எல்லைகளை நிர்ணயம் செய்திருந்தது. அதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருத்த யோசனைகள் கிடைத்ததும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (25) சபை ஒத்தி வைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உறையாற்றுகையில் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

உள்ளுராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன சபை ஒத்தி வைப்பு பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றினார். ஆரோக்கியமான ஜனநாயகத்தை உறுதி செய்யும் நோக்கில் எந்த வகையிலாவது உள்ளுராட்சி தேர்தலை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்ஹ உரையாற்றுகையில், தேர்தலை பின்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாதென்றார். புதிய சட்டங்களுக்கு அமைய தேர்தலை நடத்த வேண்டும். பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும உரையாற்றுகையில் தேர்த்லை பின்போடுவதன் மூலம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கத்தின் தவறுகளால் தேர்தலை பின்போட நேர்ந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உரையாற்றுகையில் அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க பாடுபடுமென்றார். கொழும்பு, கண்டி, குருணாகல், இரத்தினபுரி மாவட்டங்களில் எல்லை நிர்ணயத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது. பாராளுமன்ற தெரிவுக்குழு அனுமதித்த பின்னர் திருத்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. அடுத்த ஆண்டு முற்பகுதியில் தேர்தலை நடத்துவது ஜனாதிபதியின் நோக்கமென அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post