உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மேலும் பிற்போடப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டே குறித்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் ஆண்டின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீடுகளை விசாரணை செய்வதற்கு கால அவகாசம் தேவையெனவும் அத்துடன் எல்லை நிர்ணய மறுசீரமைப்புக்கு பின்னரே சரியான முறையில் தேர்தலை நடாத்த முடியும் எனவும் மக்களுக்கு சேவையாற்றவே தான் இருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.